தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

70 நாடுகளில் வெளியாகும் ஆதிபுருஷ் டிரைலர்! 

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் 70 நாடுகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். 

2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கடந்த 2022-ல் வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இப்படத்தின் டிரைலர் வருகிற மே 9ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் டிரைலர் வெளியாகிறது. இந்நிலையில் 70க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

சமூகவலைதளங்களில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.