
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் புதிய படம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மே 22 ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால், லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஏற்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.