
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயனுக்கு நான்தான் வில்லன்: மிஷ்கின் அதிரடி!
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளதாகவும் விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி!
இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் அக்டோபர் மாதம் விடுமுறை தினத்தில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், தனுஷ் எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். கேப்டன் மில்லர் தீபாவளிக்கு ரிலீஸாகாவிட்டால் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியானால் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கென விடுமுறை 4 நாள்களில் வசூலிட்ட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...