கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
தக் லைஃப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கான, கதை - திரைக்கதை பணிகளையும் மணிரத்னம் முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தக் லைஃப் படத்திற்கான பெயர் அறிவிப்பு விடியோவை நேற்று (நவ.6) படக்குழு வெளியிட்டிருந்தது. வெளியாகி 19 மணிநேரங்களே ஆன நிலையில் இதுவரை இந்த விடியோ 1.5 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியிருக்கிறது.
கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இருக்கை நுனி திரில்லர்.. கருடன் - திரை விமர்சனம்!
இந்த வரவேற்புக்கு இடையே கவனிக்கப்பட வேண்டியது படத்தின் பெயர். 1983 ஆம் ஆண்டு 'பல்லவி அனுபல்லவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம், கடந்த 40 ஆண்டுகளில் தான் இயக்கிய 25 படங்களில் ஒரு படத்திற்குக் கூட ஆங்கிலத்தில் பெயரை வைக்கவில்லை.
காரணம், நல்ல வாசிப்பாளரான மணிரத்னம் தமிழ் மொழியின் மீதும் பாரதியாரின் வரிகள் மீதும் ஈடுபாடு கொண்டவர். காற்று வெளியிடை போன்ற பாரதியின் வரியை படத்தின் பெயராகவும் வைத்திருக்கிறார். மேலும், பாரதியின் கவிதையை பாடலாகவும் தன் படங்களில் இணைத்திருக்கிறார்.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் படத்திற்காக, ‘தக் லைஃப்’ என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார் மணிரத்னம்!
இதையும் படிக்க: கமல் - 234 போஸ்டரில் இருக்கும் வரிகள்!
ஏன் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் குழம்பினாலும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட இயக்குநர் எனப் பெயரைப் பெற்றவர், இந்த மாதிரி எதையாவது செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம் என்கிறார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


