கறுப்பாக இருந்தால் அழகில்லையா?: கார்த்திக் சுப்புராஜ் ஆவேசம்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர் ஒருவரின் மோசமான கேள்விக்கு பதிலளித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நிமிஷா சஜயன்
இதையும் படிக்க: என் தங்கமே...: நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
நிறப் பிரச்னையால் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக ஆரம்பித்தாலும் இது பழங்குடியினப் பிரச்னையை மையமாக கொண்டு சிறப்பாக எடுக்கப்படிருக்கிறது.

படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்ததால் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நிரூபர் ஒருவர், “சித்தா படத்தில் கலக்கியிருந்த நிமிஷா சஜயன் அவ்வளவு அழகாக இல்லையென்றாலும் சிறப்பாக நடித்திருப்பார். அவரை எப்படி வேலை வாங்கினீர்கள்” எனக் கேள்வி கேட்பார்.
இதையும் படிக்க: நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா? மன்சூர் அலிகான் விளக்கம்!

அதற்கு கார்த்திக் சுப்புராஜ், “கறுப்பா இருந்தால் அழகில்லையா?.. அது உங்க மனநிலை சம்பந்தப்பட்டது. அது தவறான மனநிலை” எனப் பதிலளித்திருப்பார்.
இந்த விடியோவுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...