தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2023, 9:37 am

மலையாளத்தில், ‘நஞ்சுகளூடே நாட்டில் ஓரிடவேள’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவராக படிப்பை முடித்தவர் ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தார். முதல் படத்தில் பெரிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்ததாக இவர் நடித்த ‘மாயநதி’, ‘வரதன்’ ஆகிய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

தொடர்ந்து தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்பட பல படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி. குறிப்பாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்த ‘பூங்குழலி’ கதாபாத்திரமே அவரின் பிரபலத்தை மேலும் விரிவாக்கியது. அதன் மூலமே தென்னிந்திய ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார். 

Story image

பூங்குழலி கதாபாத்திரம் தன் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்து விட்டதாக ஐஸ்வர்யா லட்சுமியே கூறியிருக்கிறார்.

இயல்பான தோற்றம், மெலிதான உடலமைப்பு என எதார்த்த தோற்றத்தில் இருந்தாலும் படத்திற்குப் படம் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் பட்டாளம் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்திற்குப் பின் சில படங்களில் நடித்து வருகிறார். 

Story image

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இவரின் சமீபத்திய புகைப்படங்கள் கவனத்தைப் பெற்று வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.