டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பிரபல டிவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே தொடர்!

 டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக முன்னேறியதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் பார்க் வெளியிடும் டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக முன்னேறியதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

அண்ணன் - தம்பிகள் 4 பேர் மற்றும் அவர்களின் மனைவி மற்றும் உறவுகளைச் சுற்றி நடக்கும் கதைக்களம் பாண்டியன் ஸ்டோர்ஸின் மையக்கரு.

இந்தத் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த வி.ஜே. சித்ரா உள்பட பல முதன்மை பாத்திரங்கள் மாறியுள்ளன. நெடுந்தொடர்களில் இருக்கும் பெரிய சவால், தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதாபாத்திரத்தை நடிக்கவைப்பது. பல தனிப்பட்ட காரணங்களால் அவ்வாறு செய்ய முடிமால் போவது தவிர்க்க முடியாதது. 

Story image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கரான். வெங்கட் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் நடித்துவந்த சரவணன் விக்ரம் தற்போது பிக் பாஸ் -7 நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றுள்ளார். 

இந்தத் தொடர் அக்டோபர் தொடக்க வாரத்தில் ஆயிரத்து 325 எபிஸோடுகளை நிறைவு செய்து ஒளிபரப்பாகி வருகிறது. இதன்மூலம் 5 ஆண்டுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பான முதல் தொடரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்தான்.  டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக முன்னேறியதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.