ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மணலில் புதைந்த தமன்னா: வைரல் புகைப்படம்!

மணலில் புதைந்த தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 10:41 am

மணலில் புதைந்த தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். 

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளியாகின. 

Story image

காவாலா பாடல் மூலம் டிரெண்டான தமன்னா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், நேர்காணல் ஒன்றில் அதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், மணலில் முழு உடலும் புதைந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்துக்கு தமன்னா ரசிகர்கள், இது ஒருவகையான தியானம் என்றும், இதனால் மனம் மற்றும் உடல் இலகுவாகும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.