விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. நடிப்பு மட்டுமல்லாமல் சிவகார்திகேயன், சிம்பு ஆகியோரை வைத்து புதிய படங்களைத் தயாரித்தும் வருகிறார். மணிரத்னம், ஹெச்.வினோத் ஆகியோர் படங்களில் நாயகனாகவும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக விடியோ நவ.3-ல் வெளியாகிறது. தொடர்ந்து, நவ.8 ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னமுடன் இணையும் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி பட இயக்குநருக்கு கார் பரிசளிப்பு!
அதேநாளில், கமல் நடிக்கும் ‘கல்கி’ படத்தின் அவரின் தோற்றப் போஸ்டரும் வினோத் இயக்கத்தில் உருவாகும் கமல் - 233 படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமுக்கு முன் சினிமாவிலிருந்து விலகியிருந்த கமல்ஹாசன், தற்போது பல அப்டேட்களைக் கையில் வைத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கும் எல்லம்மா தோற்ற போஸ்டர்!

இரண்டே நாள்களில் பான் இந்திய நடிகர்களின் வசூலை முறியடித்த ஸ்பைடர் மேன்!

ஆக. 4,5,6 தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்
5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


