விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய தொடரின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சி தொடர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், டிஆர்பியில் பின் தங்கிய தொடர்களை முடிப்பது வழக்கம். அதன்படி, காற்றுக்கென்ன வேலி, கன்னே கலைமானே தொடரை தொடர்ந்து டிஆர்பியில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கரேஷ் குமார் மற்றும் சாய் காயத்ரி நடிக்கவுள்ளனர்.
இந்த தொடருக்கு, 'நீ நான் காதல்' என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டார் மா தொலைக்காட்சியில் வெற்றி தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் உள்ளது. இந்த தொடரை தாய் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: டிஆர்பி இல்லாததால் முடிவுக்குவரும் பிரபல சீரியல்!
சங்கரேஷ் குமார் முன்னதாக ரோஜா மற்றும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்தவர். ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் சாய் காயத்ரி நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை உருவாக்கும் சாட்ஜிபிடி!

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!

திரையில் மீண்டும் விஜய் - த்ரிஷா! திருப்பாச்சி படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

அமேசான் சுதந்திர தின சலுகை! என்னென்ன வாங்கலாம்?
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!



