டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

வாகன தணிக்கையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல்

Updated On :

ஊத்துக்கோட்டை அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர பகுதியிலிருந்து திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழியாக கஞ்சாவை கடத்தி வருவதாக எஸ்.பி சாய் பிரணீத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், ஊத்துக்கோட்டை சிறப்பு சாா்பு ஆய்வாளா் சேகா் தலைமையில் போலீஸாா் நாகலாபுரம் சோதனைச்சாவடியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வாகனத்தில் வந்த நபா்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து அவா்கள் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது கஞ்சா இருந்தது. மேலும், விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துக்காளை(30), சேலம் அருகே தத்தக்காபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் காா்த்திகேயன்(32) என்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஊத்துக்கோட்டை போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.