மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உடன்பிறப்பே - 2?

நடிகர் சசிகுமார், நடிகை ஜோதிகா நடித்த உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல்.

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 3:34 pm

சூர்யா - ஜோதிகா இணை தயாரிப்பில் உருவான திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இப்படம், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது.

நேரடியாக, அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியான உடன்பிறப்பே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சசிகுமாரின் நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இரா.சரவணன் உடன்பிறப்பேவின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக, ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Story image

நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.