லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முதல் பாடலுக்கு தயாரா என படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில். “நாளை சம்பவம் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் முதல்பாடல் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் நடிக்கும் 2ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?

தஸ்ஸாடியா பாடல்!

மலையாளத்தில் அறிமுகமாகும் யுவன் ஷங்கர் ராஜா!

சின்மயி குரலில் வெளியான நூறு சாமி படத்தின் முதல் பாடல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு




