
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தொடர்ந்து ஜெயம் ரவி, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கிய 'சைரன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஜெயம் ரவி, 'ஜீனி' படத்தில் நடித்து வருகிறார்.
சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமூத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சைரன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









