நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் படத்தின் முதல் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் இதன் பாடலாசிரியர் மதன் கார்க்கி நேர்காணல் ஒன்றில், “கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள பாடல்களுக்கும் முதலில் இப்படித்தான் கலவையான விமர்சனம் வந்தது. ஆனால் பின்னர் அது கல்ட்டாக மாறியது. இந்தப் பாடலின் முக்கியக் காரணம் அனைவரையும் நடனமாட வைக்க வேண்டும். எல்லா பாடல்களும் எனக்கு ஒரு பரிசோதனை முயற்சிதான். அதனால் கலவையான விமர்சனம் என்பது இயல்பான ஒன்றுதான்.
பாடல் குறித்து வெங்கட் பிரபு, ‘ஒரு நிகழ்வுக்குப் பிறகு 4 நண்பர்கள் கொண்டாடும் ஒரு பார்டி பாடல் வேண்டும்’ என மட்டும் கூறினார். நடிகர் விஜய் பூஜையின்போது, ‘பாடல் நன்றாக இருக்கிறது. நன்றி’ எனக் கூறினார்” எனப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மா அம்மாதான் பாடல்!
கரசாமி காலி! கருப்புசாமி?

நம்ம பாட்டனோட பாட்டு... வெளியானது கருப்பு படத்தின் பாடல்!

தஸ்ஸாடியா பாடல்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு




