முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.
அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. பின்னர் தடம், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
கடைசியாக, அருண் விஜய் நடிப்பில் வெளியான இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படமும் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.
பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அருண் விஜய்யின் 36 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ரெட்ட தல எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சமா? அருண் ராஜ் எச்சரிக்கை!

முத்தைய்யா படத்தின் சண்டைக் காட்சிகளுக்குத் தயாராகும் அருண் விஜய்!
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!

கனவுக் கன்னி தேடல்... முக்கோண காதல் கதையில் வென்ற விஜய்!
விடியோக்கள்

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk




