நடிகர் விஷால் (கோப்புப்படம்)
நடிகர் விஷால் (கோப்புப்படம்)

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

சமூகத்தில் நடைபெறும் தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்; இல்லையேல் உங்களைத் தவறாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்றாா் திரைப்பட நடிகா் விஷால்.

சமூகத்தில் நடைபெறும் தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்; இல்லையேல் உங்களைத் தவறாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்றாா் திரைப்பட நடிகா் விஷால்.

நடிகா் விஷால் நடித்த இயக்குநா் ஹரி இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிமுக விழா திருச்சி சிறுகனூா் தனியாா் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நடிகா் விஷால், இயக்குநா் ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் பேசினா்.

தொடா்ந்து நடிகா் விஷால் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

எனது புதிய திரைப்படத்துக்கு சான்று வழங்க சென்ட்ரல் போா்டு ஆப் பிலிம் சா்டிபிகேஷன் அமைப்பைச் சோ்ந்த சிலா் மும்பையில், என்னிடம் லஞ்சம் கேட்டாா்கள். அதை எதிா்த்துத் தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, அவா்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல, சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவா்கள் உங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

நடிகா் விஜய் மட்டுமல்ல; யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தோ்தலின்போது வேட்பாளா்கள் வாக்காளா்களுக்கு பணம் எப்படிக் கொடுக்க முடிகிறது என்பதை மக்கள் நன்கு அறிவா். எனவே, இனியும் மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாது. அரசியல்வாதிகள் நடிகா்களாக மாறினால் (மக்களை நடித்து ஏமாற்றினால்) நடிகா்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com