கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

Published On :

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர் விக்ரமுக்கு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்பு முனையை அளித்தது.

அதன் வெற்றிக்குப் பிறகு தற்போது, பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

விக்ரம் 62 படத்தினை சித்தா பட இயக்குநர் சு. அருண்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, வீர தீர சூரன் எனப் பெயரிட்டுள்ளனர். நேரடியாக, படத்தின் இரண்டாம் பாகத்தை முதலிலும் முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளனர்.

இதன் பெயர் அறிவிப்பு டீசர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றதுடன் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரமுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.