இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் டிஆர்பியில் முதல் 5 இடங்களைப் பிடித்து முன்னணியில் உள்ளது. அதனால்தான் ரசிகர்கள் இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் தொடர்களை விரும்பி பார்க்கின்றனர்.

1000 எபிசோடுகளைக் கடந்து இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அன்பே தொடர் கடந்த வாரம் நிறைவடைந்தது. நிகிதா ரமேஷ் பிரதான வேடத்தில் நடிக்கும் புதிய தொடரான மல்லி தொடர் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிலையில், இனியா மற்றும் மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் ஏப்ரல் 29 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய தொடரான மல்லி தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

முன்னதாக வாரத்தின் 6 நாள்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இனியா தொடர், திங்கள்கிழமை (ஏப். 29) முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இனியா தொடரில் பிரதான வேடத்தில் நடிகை ஆல்யா மானசா நடித்து வருகிறார்.

அதேபோல், முன்னதாக, வாரத்தின் 6 நாள்களில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் மனைவி தொடர், திங்கள்கிழமை (ஏப். 29) முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் பிரதான வேடத்தில் நடிகை ஷபானா நடித்து வந்த நிலையில், அவருக்குப் பதிலாக தேப்ஜானி நடிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com