
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷ்ரத்தா தாஸ். 2008-இல் தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
2010இல் இவர் நடித்த லாகூர் திரைப்படத்துக்கு திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை இயக்கிய இயக்குநர் சஞ்சய் புரன் சிங் சௌகானுக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.
37 வயதாகும் ஷ்ரத்தா தாஸ் இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு கவனம் ஈர்ப்பவர்.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் புதியதாக யூடியூப் சேனலை துவங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
நடிகைகள் நயன்தாரா, தமன்னா சினிமாவை தாண்டி தங்களுக்கென்று தனியாக தொழில் நடத்தி வருகிறார்கள். சிலர் மட்டுமே யூடியூப் சேனல்களை நடத்துகிறார்கள்.
தற்போது ஷ்ரத்தா தாஸ் அர்தம், பாரிஜாத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.