
நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
தற்போது, ஸ்பார்க் என்கிற மூன்றாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்பாடலை கங்கை அமரன் எழுத, யுவன் மற்றும் விருஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.