வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ஆவேஷம் ரீமேக்கில் நாயகனாகும் பாலகிருஷ்ணா?

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:02 pm IST

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல்.

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும். ஓடிடியில் வெளியாகியும் பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகவும் நாயகனாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆவேஷம் ரீமேக் படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் தகவல் ஃபஹத் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.