நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

கேரள மாநில விருதுகள் யாருக்கு? கவனம் ஈர்க்கும் பட்டியல்!

கேரள மாநில விருது பரிந்துரையில் பல முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 3:00 pm IST

கேரள மாநில விருது பரிந்துரையில் பல முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிவிக்கபட உள்ளன. இந்தாண்டு நடைபெறும் 54-வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், 84 படங்கள் புதுமுக இயக்குநர்களால் உருவானவை.

சிறந்த நடிகருக்கான பட்டியலில் மம்மூட்டி (காதல் தி கோர்), பிருத்விராஜ் (ஆடு ஜீவிதம்) ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்தாண்டு சிறந்த நடிகருக்கான மாநில விருதை நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக மம்மூட்டி பெற்றிருந்தார். இந்த முறை, பிருத்விராஜுக்கே அதிக வாய்ப்பு எனத் தெரிகிறது.

அதேபோல், சிறந்த நடிகைக்கான பட்டியலில் நடிகைகள் ஜோதிகா (காதல் தி கோர்), பார்வதி திருவோத்து (உள்ளொழுக்கு), ஊர்வசி (உள்ளொழுக்கு), கல்யாணி பிரியதர்ஷன் (ஷேஷம் மைக்கில் ஃபாதிமா ), அனஸ்வரா ராஜன் (நேரு) உள்ளிட்டோருக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது. இதில், பார்வதி மற்றும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

சிறந்த இயக்குநர் மற்றும் திரைப்படங்களின் பட்டியலில் பிளஸ்ஸி (ஆடுஜீவிதம்), ஜூட் ஆண்டனி ஜோசப் (2018), ஜியோ பேபி (காதல் தி கோர்), ராபி வர்கீஸ் ராஜ் (கண்ணூர் ஸ்குவாட்), ரோஹித் எம்ஜி கிருஷ்ணா (இரட்டா) ஆகியோர் விருதுக்காகக் காத்திருக்கின்றனர்.

யாரெல்லாம் விருது பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.