பிக்பாஸ் - 8 தொகுப்பாளர் இவரா?

பிக்பாஸ் - 8 தொகுப்பாளர் இவரா?
Published on
Updated on
2 min read

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.

கமல்ஹாசன்.
கமல்ஹாசன்.

இந்த நிலையில், தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதனால், பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான கமல்ஹாசனின் கருத்துகள் மேல் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது, அவர் விலகியதால், அடுத்த பிக்பாஸ் சீசன் தொகுப்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் - 8 தொகுப்பாளர் இவரா?
கங்குவா டிரைலர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதற்கு முன்பு, நடிகர் கமல்ஹாசன் ஓய்விலிருந்தபோது சில வாரங்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் தொகுப்பாளராகக் கலந்துகொண்டனர். இந்த இருவரில் யாராவது ஒருவர் பிக்பாஸ் - 8 சீசனின் தொகுப்பாளராக இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி.
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி.

ஆனால், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியை புதிய தொகுப்பாளராக்க விரும்புவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கவனம் பெற்ற விஜய் சேதுபதி, பிக்பாஸுக்கும் சரியாக இருப்பார் என்றே நினைக்கின்றனர். காரணம், எதார்த்தமாகவும் அதேநேரம் புரிதலுடன் பேசக்கூடிய விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசன் இடத்திற்கு சிறந்த தேர்வாக இருப்பார் என்றே கருதப்படுகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com