அக்டோபர் வெளியீடாக வணங்கான்?
வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியவில்லை.
தற்போது, வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாள்களாக இப்படம் தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...