நடிகர்கள் மோகன்லால், ஃபஹத் ஃபாசில் இணைந்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்தியளவில் முக்கியமான நடிகராக இருப்பவர் ஃபஹத் ஃபாசில். மலையாளத்தில் சின்னச் சின்ன படங்களில் நடித்து, தன் அபாரமான திறமையால் இன்று இந்தியளவில் தனக்கென ரசிகர்களை வைத்துள்ளார்.
நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பல படங்களைத் தயாரித்துள்ளார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
தமிழில், ரஜினிகாந்த்துடன் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆக.8 ஆம் தேதி ஃபஹத்தின் பிறந்தநாள் என்பதால் அதற்கான கொண்டாட்டத்தில் பிரபலங்கள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் மோகன்லால் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எடா மோனே... (டேய் மகனே) லவ் யூ’ எனக் குறிப்பிட்டு ஃபஹத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு மலையாள திரை ரசிகர்களிடம் பெரியளவில் கவனம் பெற்றுள்ளது.