அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது.
ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.
படக்குழுவினர் இந்த வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டிகொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2ஆவது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது.
முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தனது மீதான அதிர்ஷ்டமில்லாதவர் என்ற கிண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.