தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களை பெற்றன.
தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் நேற்று (ஆக.29) வெளியாகியது.
இதற்கான நேர்காணலில் பங்கேற்ற நடிகர் நானி கமல் குறித்து பேசியதாவது:
நான் கமல் சாரின் நடிப்புக்காக மட்டும் ரசிகர் ஆகவில்லை. சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் திரைக்கதை, மேக்கப், நடனம் என அனைத்திலும் அவர்தான் அரசன். தான சம்பாதித்த அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்தவர். 5 வயது முதல் சினிமாவில் நடிக்கிறார். சினிமாவை தாண்டி அவர் செய்த முதல் விசயம் அரசியல்.
என்னைப் பொருத்தவரையில் இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே அதிகம் கொண்டாடப்பட்ட செல்லக் குழந்தை என்றால் அது கமல்ஹாசன் மட்டுமே.
கமலின் அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நாயகன் திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றார்.