மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்..!
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.
லவ் டுடே படத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் அசத்தினார். லவ் டுடே படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர்.
பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மேலும், டிராகன் என்ற படத்திலும் நடித்துள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது:
நடிகராக நடித்துள்ள டிராகன் படம் பிப்ரவரியில் வெளியாகும். அடுத்து எல்.ஐ.கே படத்தில் நடித்து வருகிறேன். அதற்கடுத்து புதிய படம் ஒன்றில் ஜனவரிமுதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறேன் என்றார்.
சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜனவரியில் இருந்து நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...