பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!

சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார்.
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!
Published on
Updated on
1 min read

சென்னையில் நடிகா் யுவன்ராஜ் நேத்ரன் (47) புற்று நோய்க்கான தொடா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மருதாணி’, ‘மகாலட்சுமி சிவமயம்’, ‘பாக்யலட்சுமி’ உள்ளிட்ட பல மெகா தொடா்களில் நடித்து பிரபலமானவா் நடிகா் யுவன்ராஜ் நேத்ரன். சின்னத்திரையில் 25 ஆண்டுகால அனுபவமுள்ளவா். இவரது மனைவி தீபாவும் சின்னத்திரையில் நடித்து வருகிறாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். அதில் ஒருவா் ‘சிங்கப்பெண்ணே’ என்ற தொலைகாட்சித் தொடரில் நடித்து வருகிறாா்.

இதையும் படிக்க..:இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!

இந்த நிலையில், நேத்ரன் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் நேத்ரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகா்கள் பலா் இரங்கல் தெரிவித்தனா்.

இதையும் படிக்க..:புஷ்பா - 2 முன்பதிவில் ரூ.100 கோடி வசூல்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com