சௌதி அரேபிய திரைப்பட விழாவில் ஆமிர் கானுக்கு கௌரவம்..!

பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு சௌதி அரேபிய திரைப்பட விழாவில் மிக உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஆமிர் கான்
ஆமிர் கான்படம்: எக்ஸ் / ரெட்சீ ஃபிலிம்
Published on
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு சௌதி அரேபிய திரைப்பட விழாவில் மிக உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியா ஜெட்டாவில் டிச.5 முதல் டிச.14வரை ரெட் சீ (செங்கடல்) திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

இதன் துவக்க விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக அழைப்பட்டிருந்தனர்.

இந்த விழாவில் இந்திய நடிகர் ஆமிர் கானும் அழைப்பின் பேரின் கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆமிர் கானுடன் கரீனா கபூர் வில் ஸ்மித், வின் டீசல். ஸ்பைக் லீ ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் செங்கடல் திரைப்பட விழாவில் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட எமிலி பிளண்ட், எகிப்திய நடிகை மோனா ஜகி உடன் ஆமிர் கானுக்கு கௌர விருது அளிக்கப்பட்டது.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஆமிர்கான் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவிலே அதிகம் வசூலித்த படமாக அவரது படங்களே இருக்கின்றன.

தங்கல், பிகே, 3 இடியட்ஸ், லகான், ரங் தே பசாந்தி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சினிமாவில் ஆமிர் கானின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த கௌரவம் செய்யப்பட்டாதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

30 ஆண்டுக்களுக்கான கௌரவம்

இதில் கலந்துகொண்டு ஆமிர் கான் பேசியதாவது:

இங்கு வந்திருப்பது மிகவும் கௌரமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் நடித்த படங்களினை பாராட்டும் விதமாக இது நடந்திருப்பதற்கும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக என்னுடைய சினிமா பயணத்தில் என்னுடன் பணியாற்றிய பல எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சௌதி அரேபியாவில் வந்து செங்கடல் திரைப்பட விழாவில் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சியாக கருதுகிறேன். இது அற்புதமாக இருக்கிறது. மீண்டும் இங்கு வந்து இந்த நாட்டின் கலாச்சாரத்தை நெருக்கமாக அனுபவிக்க விரும்புகிறேன்.

சாதனை படைப்பது எப்படி?

நான் விரும்பியதை படமாக எடுக்க, நடிக்க, தயாரிக்க எனக்கு சுதந்திரம் இருக்கிறது. தயாரிப்பதுதான் சற்று கடினமான வேலையாக இருக்கிறது.

எந்தப் படமும் எளிதானது இல்லை. எல்லா படங்களையும் பதற்றத்துடனே தேர்வு செய்வேன்.

பல இயக்குநர்களின் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்துதான் நானும் அந்தமாதிரியான முடுவுகளை எடுக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும் என்றார்.

ஆமிர் கானின்  நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட இருப்பதால் இனி சில ஆண்டுகளுக்கு நடிக்க போவதில்லை என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com