பெரம்பூரில் விஜய் வெற்றி! திருச்சி கிழக்கிலும் முன்னிலை!பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் ஈடுபடுகிறார் முத்துக்குமரன்.

News image

முத்துக்குமரன் - படம் |எக்ஸ்

Updated On :11 டிசம்பர் 2024, 4:26 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் தொழிலாளர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் மேலாளராக இருந்து தொழிலாளியாக மாற்றப்பட்டுள்ள முத்துக்குமரன், சைக்கிள் ஓட்டும் வேலையை சரியாகச் செய்யாமல், விளையாட்டாக இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பிக் பாஸ், விதிகளை மீறி விளையாடியதாக வீட்டிற்குச் செல்லும் குடிநீர், எரிவாயு இணைப்புகளைத் துண்டித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கு ரஞ்சித் கேப்டனாக உள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் அருண் பிரசாத், ரயான், ராணவ், ஜாக்குலின், சத்யா, பவித்ரா, அன்ஷிதா, ரஞ்சித் ஆகியோர் தொழிலாளர்களாக விளையாடுகின்றனர்.

இவர்களுக்கு வேலை வழங்கும் ஆலை மேலாளர்களாக செளந்தர்யா, முத்துக்குமரன், மஞ்சரி, ஜெஃப்ரி, வி.ஜே. விஷால், தீபக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் விதிகளின் படி போட்டியில் சரியாக செயல்படாத தொழிலாளி ஒருவரையும், மேலாளர் ஒருவரையும் அணிமாற்றலாம்.

முத்துக்குமரன்

முத்துக்குமரன் - படம் | எக்ஸ்

அந்தவகையில் மேலாளர் பொறுப்பில் இருந்த முத்துக்குமரன் தொழிலாளியாக மாற்றப்படுகிறார். ஆலையில் தொழிலாளிகள் சைக்கிள் ஓட்டினால்தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மேலாளர்களுக்கு குடிநீர், எரிவாயு போன்றவை கிடைக்கும். இதுவே போட்டியின் சாராம்சம்.

மேலாளராக இருந்து தொழிலாளியாக மாறிய முத்துக்குமரன், ஆலையில் சைக்கிள் ஓட்டும் வேலையைச் செய்யாமல் விளையாட்டாக சுழற்றிச் சுழற்றி விளையாடுகிறார். சக்கரம் சுற்ற வேண்டுமே தவிர, நான் பெடலை சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனப் பேசுகிறார்.

ஆனால், பெடலை சுற்றாததால் விதிகளை மீறியதாக வீட்டின் குடிநீர், எரிவாயு இணைப்புகளை பிக் பாஸ் துண்டித்தார். இதனால் மேலாளர்கள் அனைவரும் தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதோடு மட்டுமின்றி தொழிலாளர்களுக்கான உணவையும் மேலாளர்கள் சமைத்துத் தருவார்கள். தற்போது எரிவாயு நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களுக்கான உணவும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் பிக் பாஸ் வீட்டின் விளையாட்டைக் கெடுக்கும் செயல்களில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.