
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் 73 நாள்களைக் கடந்துள்ளனர்.
கடந்த வாரம் நடிகர் சத்யா, நடிகை தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11வது வாரத்தை எட்டியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் 6 பேர் நுழைந்ததால், வெளியேற்றப்பட்டவர்கள் போக, எஞ்சியுள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 13ஆக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளுக்கு இன்னும் 4 வாரங்களே உள்ளன. இதில் கடைசி வாரம் முழுக்க முழுக்க வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வாரமாகவே இருக்கப்போவதால், இந்த 4 வாரங்களில் நீடிக்கும் போட்டியாளர்களுக்கே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அணியாக இருந்து விளையாடியதை நிறுத்திவிட்டு, தனித்தனியாக விளையாடத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி குற்றவாளியா? அருண் பிரசாத்துக்கு ஆதரவாக அர்ச்சனா! (விடியோ)
முத்துக்குமரன், அருண் பிரசாத் உள்ளிட்டோர் தனித்து விளையாடி வரும் நிலையில், மற்ற போட்டியாளர்களும் தனித்து ஆடும் போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாக பிக் பாஸ் வீட்டில் வாய்வழியாக இருந்த சண்டை, சச்சரவு காயமடையும் வரை சென்றுள்ளது. இன்று வெளியான முன்னோட்ட விடியோவில் ராணவ்வுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் 3 வாரங்களுக்கு சிகிச்சையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக வி.ஜே. விஷால் குறிப்பிடுகிறார்.
இதனால், பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள வாரங்களில் ராணவ் எப்படி விளையாடுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: தூக்கி வீசிய ஜெஃப்ரி! மருத்துவமனையில் ராணவ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.