
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் புதிய படத்தின் புரோமோ வெளியாகியுள்ளது.
வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.
மிஸ்டர் பாரத் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார். இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள்.
பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படம் ஃபைட் கிளப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.