எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்த முத்து! டாஸ்க்குகளை ரத்து செய்து பிக் பாஸ் அதிரடி

சக போட்டியாளருக்கு விட்டுக் கொடுத்து விளையாடியதால் டாஸ்க்குகள் ரத்து செய்வதாக அறிவிப்பு...

News image
பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்த முத்துக்குமரன்..- Vijay TV
Updated On :20 டிசம்பர் 2024, 7:14 am

DIN

பிக் பாஸ் சீசன் 8 போட்டியில் கேப்டன்சி மற்றும் நாமினேசன் ஃப்ரீ டாஸ்க்குகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டி 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இன்னும் 4 வாரங்களே மீதமுள்ள நிலையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.

இந்த வாரம் நாமினேசன் ஃப்ரீ பாஸ் (போட்டியாளர்களால் அடுத்த வாரம் நாமினேசன் செய்ய முடியாது) பெறுவதற்காக கற்களை மையமாக வைத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நான்கு அணிகளாக பிரிந்து விளையாடிய இந்த டாஸ்க்கில் ஜாக்குலின், ரயான் மற்றும் ரஞ்சித் இடம்பெற்ற அணி இறுதியில் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அவர்களில் இருந்து ரயானை தேர்வு செய்து நாமினேசன் ஃப்ரீ பாஸை அந்த அணியினர் வழங்கினர்.

இந்த நிலையில், இந்த வாரம் மோசமான போட்டியை வெளிப்படுத்தியதாக செளந்தர்யா மற்றும் அன்சிதாவை போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

தொடர்ந்து, அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்பதற்காக சிறந்த போட்டியாளர்களாக முத்துகுமரன், பவித்ரா, ஜெஃப்ரி தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் மூன்று பேருக்கும் கோல் அடிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், பவித்ராவுக்கு முத்துகுமரன் விட்டுக் கொடுத்து விளையாடினார்.

இதனைத் தொடர்ந்து, எச்சரிக்கையை மீறியும் முறையாக விளையாட்டை விளையாடாததால் கேப்டன்சி டாஸ்க் இந்த வாரம் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

மேலும், இனிமேல் நாமினேசன் ஃப்ரீ பாஸும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் பிக் பாஸ்.

இதனைக் கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், முத்துக்குமரன் உடைந்து அழும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.