12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உண்மை சம்பவத்தைப் படமாக்கும் ராஜ்குமார் பெரியசாமி?

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி படம் குறித்து....

Published On :

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷுடனான படம் குறித்து பேசியுள்ளார்.

ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியான அமரன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் வேலைகள் முடிந்ததும் துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “அமரன் திரைப்படம் உண்மையான நாயகனான மேஜர் முகுந்த் வரதராஜனை பற்றியது. என் அடுத்தப்படம் சமூகத்தில் அடையாளம் கிடைக்காமல்போன நாயகர்களின் கதையாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார். இதனால், தனுஷுடனான படமும் உண்மை சம்பவத்தைத் தழுவி இருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.