ஸ்பிரிட் படத்தின் அப்டேட் பகிர்ந்த பிரபாஸ்!
இயக்குநர் சந்தீப் வங்காவுக்கு நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இயக்குநர் சந்தீப் வங்காவுக்கு நடிகர் பிரபாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாவதும் பொது மக்களிடையே வரவேற்பைப் பெறுவதும் வசூலில் அசத்துவதும் வழக்கமாகிவிட்டன.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல கொரிய நடிகரும் வில்லனாக நடிக்க வைப்பதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.
பிரபாஸ் தற்போது ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்ததாக சமீபத்தில் படக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு சந்தீப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் சந்தீப் பிறந்தநாளுக்கு நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில், “சந்தீப்புக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...