
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முத்துக்குமரனால் பரம்பரைக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக முத்துக்குமரனின் தாயார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரல் பகிரப்பட்டு வருகிறது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கும் அதில் வரும் வார்த்தைகளுக்கும் ஈடு இணையே இல்லை என பலர் புகழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை புரிகின்றனர்.
முதல் இரு நாளில் தீபக், ரயான், மஞ்சரி உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துசென்றனர்.
அந்தவரிசையில் மூன்றாவது நாளான இன்று (டிச. 26) முத்துக்குமரன் இல்லத்தில் இருந்து அவரின் அம்மா, அப்பா வருகை புரிந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் உணர்ச்சிவசப்பட்ட முத்துக்குமரனின் அம்மா, அவரைக் கட்டியணைத்து அழுகிறார். இதனைக் கண்ட சக போட்டியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது முத்துக்குமரன், அழக்கூடாது என தாயாரைக் கட்டுப்படுத்துகிறார். நீ நிறைய அழுதுட்ட, இனி அழக்கூடாது எனக் குறிப்பிடுகிறார் முத்துக்குமரன்.
மேலும், உன்னால் தங்கள் பரம்பரைக்கே பெருமை சேர்ந்துள்ளது என்று அவரின் தாயார் நெகிழ்ச்சி அடைந்து பேசுகிறார். முத்துக்குமரனின் தந்தை, அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசுகிறார்.
எதார்த்தமாக இருந்த முத்துக்குமரனின் பெற்றோரின் பேச்சை இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் வெற்றி பெற்றால் அதனால் வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பெருமை கொள்வார்கள் என்பதற்கு முத்துக்குமரன் ஓர் உதாரணம் என்றும் பலர் புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸில் உறுதியான காதல் திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.