பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தனது காதலை வெளிப்படுத்தினார் செளந்தர்யா.
பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த முன்னாள் போட்டியாளர் விஷ்ணு விஜய்யிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மண்டியிட்டு கேட்டு காதலை வெளிப்படுத்தினார் செளந்தர்யா.
நீண்ட நாள் நண்பர்களாக செளந்தர்யா - விஷ்ணுவிஜய் தற்போது திருமண உறவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதால், அவர்களின் நண்பர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும் செளந்தர்யாவுக்கும் விஷ்ணுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா - படம் | எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை புரிகின்றனர்.
முதல் இரு நாளில் தீபக், ரயான், மஞ்சரி உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துசென்றனர். அந்தவகையில் செளந்தர்யாவைக் காண முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான விஷ்ணு விஜய் பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றார்.
நடிப்புத் துறையில் இருப்பதால், ஏற்கெனவே அறிமுகமானவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால், அனைவரிடமும் விஷ்ணு விஜய் பேசினார்.
அப்போது இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? (வில் யூ மேரி மீ) என விஷ்ணுவிடம் மண்டியிட்டு கேட்டார். இதனால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான விஷ்ணு, செளந்தர்யாவை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டு, தனது காதலையும் வெளிப்படுத்தினார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. செளந்தர்யாவையும் விஷ்ணுவையும் அறிந்த நண்பர்கள் அவர்களின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Another sweet moment in Bb house that made me go Aww ð¥¹
— Varshini Venkat (@varshinivenkat_) December 27, 2024
Congratulations to #Soundariya for taking the big step and proposing to #Vishnu on the show! It was such a beautiful moment to watch. 𥰠My heartfelt wishes to both of them for a wonderful journey ahead. â¥ï¸â¨â¦
பிக் பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய வர்ஷினி வெங்கட், செளந்தர்யா நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும், அவருக்கு வாத்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று மருத்துவரும் செளந்தர்யாவின் நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா: பூரிப்பில் அருண் பிரசாத்!
தோழியுடன் விஷ்ணு, செளந்தர்யா - படம் | இன்ஸ்டாகிராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாயா கிருஷ்ணன்!

சின்னதிரை

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



