சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

டிமான்டி காலனி - 3 பணிகள் துவக்கம்!

டிமான்டி காலனி மூன்றாம் பாகம் குறித்து...

News image
Updated On :30 டிசம்பர் 2024, 11:26 am IST

டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்துக்கான பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாகவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.