நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

இந்தப் பாடலுக்கு என்னால் கால்களை அசைக்காமல் இருக்க முடியவில்லை: சுனைனா புகழாரம்!

நடிகை சுனைனாவின் அடுத்த படம் குறித்து ரசிகர் கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார். 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 7:09 pm IST

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள்  நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. 

Story image

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

Story image

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன. 

Story image

இந்நிலையில் எக்ஸில் கேள்வி-பதிலில் ரசிகர் ஒருவர் தெலுங்கு ரசிகர்களுக்காக ஒரு பாடலை பாட முடியுமா எனக் கேட்டார். அதற்கு சுனைனா, “என்னால் பாட முடியாது. ஆனால் குறிச்சி மடதபெட்டி பாடலுக்கு எனது கால்களை அசைக்காமல் இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார். 

மார்ச் மாதத்தில் தனது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகுமெனவும் கூறியுள்ளார். 

Story image

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. குறிப்பாக தமனின் துள்ளலிசையில் ஸ்ரீ லீலா, மகேஷ் பாபு நடனத்தில் குறிச்சி மடதபெட்டி பாடல் இன்ஸ்டாவில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.