தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அயலான் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

அயலான் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடினர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 9:15 am

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.

பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலானும் கேப்டன் மில்லர் படமும் முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அயலான் திரைப்படம் கடந்த 25 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால், இப்படம் வசூல் ரீதியான வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் இந்த வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Story image

இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொனடர். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.