பிரம்மயுகம் பட்ஜெட்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மயுகம் பட்ஜெட்!

நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் கருப்பு வெள்ளை வடிவத்தில் (பிளாக் அண்ட் ஒயிட்) வருகிற பிப்.15 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.27.5 கோடியை செலவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த கதாபாத்திரங்களால் உருவான இப்படத்தை முதலில் ரூ.2 கோடியில் தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால், கருப்பு வெள்ளை வடிவம், கலைத்துறை போன்றவற்றால் பட்ஜெட் அதிகரித்திருக்கிறது.

EXPERIENCE #Bramayugam ONLY IN BLACK & WHITE !
In Cinemas From FEB 15 !#BramayugamFromFeb15 pic.twitter.com/tY4R2QEF9W

— Mammootty (@mammukka) February 3, 2024

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com