கௌதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரிலீஸ் தேதி!
கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக்பாஸ் வருண், ராஹேய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்துக்கு பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியது.
இந்தப் படத்தின் டிரெய்லர் கௌதம் மேனனின் முந்தைய படங்களான அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. தற்போது வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக இந்தப் படம் மார்ச்.1ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...