அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா? யாரிந்த முகுந்த் வரதராஜன்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா? யாரிந்த முகுந்த் வரதராஜன்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று அமரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வி என்ற பாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

யார் இந்த முகுந்த் வரதராஜன்?

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்' பிரிவுக்கு தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும், தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா? யாரிந்த முகுந்த் வரதராஜன்?
லவ்வர் படம் பார்க்கும்போது சில நிமிடங்களுக்குப் பிறகு...: செல்வராகவன் கூறியது என்ன?

இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத்துடன் போராடி மூன்றாவது பயங்கரவாதியையும் அவர் சுட்டுக் கொன்றார். அதையடுத்து, குண்டுக் காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

புது தில்லியில் குடியரசு தின விழாவில் இந்த விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவிடம் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். முகுந்த் மறைவுக்குப் பிறகு இந்துவுக்கு ராணுவப் பள்ளியில் ஆசிரியை பணியை மத்திய அரசு வழங்கியது.

இதில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவியாக சாய் பல்லவியும் நடித்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இறந்து விடுவார் என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com