ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அமரன் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்: முகுந்த் வரதராஜன் மனைவி

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 9:50 am

DIN

சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று அமரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வி என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யார் இந்த முகுந்த் வரதராஜன்?

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்' பிரிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும் தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.

Story image

இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத்துடன் போராடி மூன்றாவது பயங்கரவாதியையும் அவர் சுட்டுக் கொன்றார். அதையடுத்து, காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இவரது கதையைத் தழுவியே சிவகார்த்திகேயனின் அமரன் உருவாகி வருகிறது.

தன் மனைவியுடன் முகுந்த் வரதராஜன்.

தன் மனைவியுடன் முகுந்த் வரதராஜன்.

இதுகுறித்து முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் முகநூலில், ”அமரன். என் நித்தியமானவன். இதை எப்படிச் சொல்வது என ஆயிரம் முறை யோசித்தேன். ஆனால், எப்போதும்போல் என் இதயத்திடம் விடுகிறேன். பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இப்போது அவரது நினைவுகளையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறேன். ஆனால், இந்த உற்சாகம் அழியாத துயரத்துடன், மாறாத நம்பிக்கையுடன், எல்லையற்ற அன்புடன் கலந்திருக்கும். ஒரு தகுதியான காரணத்திற்காக விலையுயர்ந்த ஒன்றை இழந்தோம். ஜெய்ஹிந்த்.” என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.