இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் வைபவ்வின் ரணம் படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சரோஜா படத்தில் அறிமுகமான வைபவ் பல நகைச்சுவை படங்களில் நடித்து பிரபலமானவர். மங்காத்தா படம் மிகவும் பிரபலமானது. அவரது நடிப்பில் உருவான 25வது படம்தான்‘ரணம்’. இதில், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தை ஷெரிஃப் இயக்குகிறார். மது நாகராஜன் தயாரிக்க ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார்.
வைபவ்வின் 25-வது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டார். இந்தப் படத்தின் கதை த்ரில்லர் ஜானர் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஜாலியாக கிண்டல் செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
நான் அறிமுகப்படுத்திய ஒருவர் எப்படி 25 படங்களில் நடித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அதற்குள்ளாக அதிகமாக வயதாகிவிட்டதா எனத் தெரியவில்லை. இபோதுதான் அறிமுகப்படுத்தியதுபோல் இருக்கிறது. அதைபற்றி அவரிடமே கேட்கலாம். விமர்சனங்கள் நன்றாக இருக்கிறது. கிண்டலுக்காக இல்லாமல் நிஜமாகவே படம் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள் வைபவ்வுக்கு வாழ்த்துகள் என்றார்.
இதில் வைபவ், “தினமும் இரவுப் பகலாக நடித்து 25 படங்கள் நடித்துவிட்டேன். நீங்கள் பார்த்து விட்டு கருத்து கூறுங்கள். சரோஜா மாதிரி த்ரில்லர் படம். இடைவேளையில் டீ குடிக்கக் கூட செல்லாமல் படம் பார்ப்பீர்கள்” என ஜாலியாக பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் வைபவ்வின் 30-வது திரைப்படப் பெயர்!

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்
கோலிவுட் ஸ்டூடியோ!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai





