வைபவ் நடிக்கும் மணிகண்டா - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
வைபவ்
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் மணிகண்டா. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ’மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார்.
தாந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் வெங்கட் பிரபு பணியாற்றியுள்ளார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. ஐயப்பன் வேடத்தில் வைபவ் நின்றிருக்கும் போஸ்டரில் ’இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிகண்டா பட போஸ்டர்
Summary
The first look poster of Vaibhav's upcoming film Manikanda was released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


