தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விரைவில் சூர்யா - 43 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா - இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 12:10 pm

DIN

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. 

படத்தின் அறிவிப்பு விடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970 - 80களில் நடக்கும் பிரியடிக் படமாக (period film) உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. 

இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் மதுரையில் துவங்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருச்சி, சிதம்பரம், ஹர்யாணாவிலும் படப்பிடிப்பை மேற்கொள்ள உள்ளனராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.