தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரகுல் ப்ரீத் சிங்குக்குத் திருமணம்! மணமகன் இவரா?

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:12 am

DIN

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் முக்கிய நாயகியாக இருக்கிறார். 

இந்நிலையில், நடிகை ரகுலும் பெல்பாட்டம், கணபத் படங்களின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியும் வருகிற பிப்.22 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

ரகுலும், ஜாக்கி பக்னானியும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இத்தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.